வடக்கில் பிரபாகரனுக்கு சிலை அமைவது உறுதி - பியகம சுசில தேரர்
நாட்டுக்காக உயிர் நீர்த்த இராணுவ வீரர் ஹசாக காமினியின் சிலையை உடைப்பதா புதிய அரசாங்கத்தின் இன நல்லிணக்கமென தூய்மையான ஹெல உறுமயவின் ஆலோசகர் பியகம சுசில தேரர் கேள்வியெழுப்பினார்.
கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேரர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
தென்னிலங்கை மக்களும் பௌத்த தேரர்களும் இன்று நயினாதீவிற்கு சென்று வழிபட முடியாதவாறு தாக்கப்படுவதுடன் இராணுவத்தை அங்கிருந்து முற்று முழுதாக வெளியேற்றி அதன் மூலமாக அச்சமான நிலைமையை தோற்றுவிப்பதே புதிய அரசின் திட்டமெனவும் குறிப்பிட்டார்.
தற்போது விஜயகலா மகேஸ்வரனின் திட்டமான பிரபாகரனுக்கு சிலை அமைக்கின்ற திட்டத்திற்கான காலம் கனிந்திருப்பதாகவும் சிலை அமையப்பெறுவது உறுதியெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பில் நல்லாட்சிக்கு குரல் கொடுத்தவர்கள் சொல்லும் பதில் என்ன? இதுவா நல்லாட்சி? என கேள்வியெழுப்பி தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டியெழுப்ப வேண்டாம் என அரசுக்கு தான் எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் கட்சியின் ஆலோசகரான தேரர் மேலும் குறிப்பிட்டார்.