Breaking News

மீனவர்கள் பிரச்சினையில் தலையிடுமாறு சுஷ்மாவிடம் கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிசெய்யுமாறு, இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த நாட்டின் தேசிய மீனவர் பேரையின் தலைவர் எம்.இளங்கோவன் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

அண்மையில் இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை, தாக்கப்பட்டதாகவும் அவர்களது படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனால் இந்திய வௌிவிவகார அமைச்சர் இதில் தலையிட்டு எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் தமது தொழிலில் ஈடுபடும் போது, இதுபோன்ற எந்த பிரச்சினைகளையும் எதிர்நோக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.