Breaking News

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இவருக்கான நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னரும் சமன் ஏக்கநாயக்க பிரதமரின் செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியுமாவார். 

இளைஞர்அலுவல்கள், வீடமைப்பு, வௌிநாட்டலுவல்கள, நிதி மற்றும் ஊடக அமைச்சுக்களின் உயர் பதவிகளை வகித்துள்ள இவர் மலேசியா மற்றும் இங்கிலாந்தின் இலங்கை தூதரகங்களிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.