Breaking News

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை நாளை மைத்திரியிடம் கையளிப்பு

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் போர்க்குற்ற அறிக்கையின் பிரதி ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தவார முற்பகுதியில் கையளிக்கப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடயமறிந்த இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி அரசசார்பு ஆங்கில நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலின் பயணத்துடன் இணைந்ததாக- சமகாலத்தில் இந்த அறிக்கை கையளிக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நிஷா பிஸ்வால் ஒரு நாள் பயணமாக நாளை இலங்கை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.