Breaking News

ஜெனீவா அறிக்கை சட்டவிரோதமானது! திவயின பத்திரிகை காட்டம்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஜெனீவா அறிக்கையானது சட்டவிரோதமானது என்று திவயின பத்திரிகை காரசாரமாக செய்தி வெளியிட்டுள்ளது.


இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர்களின் விபரங்கள் பகிரங்கப்படுத்தாமையின் காரணமாக அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள இயலாது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் போர்க்களத்தை நேரடியாக கண்ணால் காணாத எரிக் சொல்கெய்ம், பிபிசி செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன், சனல் 4 பணிப்பாளர் கெலம் மக்ரே, ஐ.நா.வின். விசாரணை அதிகாரி யாஸ்மின் சூக்கா ஆகியோரும் இலங்கைக்கு எதிராக குறித்த விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளனர்.

ஆனால் புலிகளின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிக்க யாருக்கும் இடமளிக்கப்படவில்லை. அத்துடன் பெரும்பாலும் சாட்சியாளர்கள் அனைவரும் வெளிநாடுகளைச் சேர்நதவர்கள் என்பதுடன், அவ்களின் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும் இலங்கைக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

அதன் காரணமாக இந்த விசாரணை அறிக்கை சட்டவிரோதமானது என்பது மட்டுமன்றி, அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அப்பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது