எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும்! டிலான்
புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்களிப்பு வழங்குமாயின், எதிர்க்கட்சித் தலைவர் பதவி நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.