தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 448 பேர் கைது
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இது வரையில் 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாருக்கு கிடைத்த 91 முறைப்பாடுகளை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார் .
முறைப்பாடுகளுக்கு அமைய சுற்றி வளைப்புகளின் போது 357 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . இதே வேளை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 179 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் இடம் பெற்ற கொலைச் சம்பவம் ,தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் போன்ற தேர்தல் வன்முறைகள் இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.