விசாரணை அறிக்கையுடன் இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக, செயிட் ராட் அல் ஹுசேன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த மாத நடுப்பகுதிக்கு மன்னர் அவர் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கத் தரப்பு எனினும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பயண நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக தமது பணியகம் நடத்திய விசாரணை அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேரில் கொண்டு வந்து இலங்கை ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக இந்த அறிக்கை கடந்த 21ஆம் நாள் இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.