Breaking News

இரு சிவி­லியன் உட்­பட 43 இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக ஐ.நா.அறிக்கை

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான, லசந்த விக்­கி­ர­மதுங்க, பிரதீப் எக்­னெ­லி­ய­கொட ஆகி­யோ­ரது கொலை­யுடன் தொடர்­பு­டைய முக்­கிய சூத்­தி­ர­தாரி தற்­போ­தைய அமைச்­ச­ர­வை­யி­லேயே அங்கம் வகிக்­கின்றார். 

அவ­ரது பெயரை குறிப்­பிட முடி­யாது என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொழும்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

ஐ.நா.வின் விசா­ரணை அறிக்­கையில் இரண்டு சிவில் பிர­தி­நி­தி­களும் 43 இரா­ணுவ அதி­கா­ரி­களும் தவ­றி­ழைத்­துள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்று நோர்­வேயின் எரிக்­சொல்ஹெம் தகவல் வெளி­யிட்­டுள்ளார். எனவே முன்னாள் ஜனா­தி­பதி, முன்னாள் பாது­காப்பு செய­லாளர், உட்­பட இரா­ணுவ அதி­கா­ரி­களை பாது­காக்­க­வேண்­டு­மானால் தேர்­தலில் மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக்கும் வகையில் மக்கள் வாக்­க­ளிக்­க­வேண்டும் என்றும் அவர் கோரினார்.

கொழும்பு ஜே ஹில்­லடன் ஹோட்லில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ல­யாளர் சந்­திப்­பொன்­றின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:-

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் இணைந்து ஆட்சி அமைக்­கவே ஐக்­கிய தேசி­யக்­கட்சி முனை­கின்­றது. இவ்­வாறு ஆட்சி அமைப்­ப­தற்கு தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கினால் தமது தேவை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு அக்­கூட்­ட­மைப்பு முயலும். இதனால் நாட்­டுக்க பேரா­பத்து ஏற்­படும். விரைவில் நாடு பிரியும் நிலை உரு­வாகும். 13 க்கு அப்பால் சென்றால் அது சமஷ்டித் தீர்­வா­கவே அமையும். 13 ஆவது திருத்­தத்­திற்கு அப்பால் செல்வோம் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்சி கூறி­யி­ருக்­கின்­றது. அவ்­வா­றாயின் கூட்­ட­மைப்பு தாம் விரும்­பி­யதை பெற்­றுக்­கொள்­ளவே முயலும்.

ஐ.நா. அறிக்கை வெளி­வ­ர­வுள்­ளது. இந்த நிலையில் இந்த அறிக்­கையில் இரு சிவில் பிர­தி­நி­தி­களும் 43 இரா­ணுவ அதி­கா­ரி­களும் தவ­றி­ழைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக நோர்­வேயின் ஹெரிக் சொல்­கெஹம் தெரி­வித்­துள்ளார். இதி­லி­ருந்து நாட்டைப் பாது­காத்த முன்னாள் ஜனா­தி­பதி, முன்னாள் பாது­காப்பு செய­லாளர், இரா­ணுவத் தள­பதி உட்பட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கப்படும் நிலை காணப்படுகின்றது.

எனவே 17 ஆம்திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உருவாவதற்கு மக்கள் தீர்ப்பளிக்கவேண்டும். இதன் மூலமே அனைவரையும் காப்பாற்ற முடியும்.