தாஜூடினின் ஜனாசா எடுக்கப்பட்டது! மகிந்தவிற்கெதிராக ஆர்ப்பாட்டம்
தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியிலிருந்து ஜனாசா தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அந்தப் பிரதேசத்தில் கூடிய சிலர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியதுடன், மகிந்தவிற்கு எதிரான பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
தாஜூடின் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.