Breaking News

தொண்டமான், அமுனுகம, டக்ளஸ் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு

முன்னாள் அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான், சரத் அமுனுகம மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இதனை உறுதி செய்துள்ளார். இவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சிக்கான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க விரும்புவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.