இலங்கை புதிய அரசாங்கத்திக்கு ஒத்துழைப்பு வழங்க ஆஸி. முடிவு
அமைதி, ஒழுக்கமான தேர்தல் மூலம் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவானமைக்கு அவுஸ்திரேலியா வாழ்த்து தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துன் இணைந்து அபிவிருத்தி, இருநாட்டு உறவு வலுப்படுத்தல், வலய-உலக சவால்களுக்கு முகங்கொடுத்தல் போன்றவற்றில் ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா இலங்கையுடன் உறவுகளைப் பேணி வருவதாகவும் வர்த்தக, முதலீடு, பாதுகாப்பு, குற்ற ஒழிப்பு, ஆட்கடத்தல் போன்ற விடயங்களில் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் தெரிவித்துள்ளார்.