Breaking News

தேர்தல் காலப்பகுதியில் மனித உரிமை மீறல்களை ஆராய விசேட குழு

பொதுத் தேர்தல் காலப்பகுதியில் மனித உரிமைகள் மீறப்படுமாயின் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

பிரதேச செயலகங்களில் இதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலை, நீதியானதும் சுதந்திரமானதுமானதாக நடத்துவதற்காக பல நடவடிக்கைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸார் உரிய விதத்தில் செயற்பட தவறும் பட்சத்தில் அது தொடர்பில் தலையீடு செய்வதற்காக குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.