Breaking News

மைத்திரியுடன் இணைந்து ரணிலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம் - மஹிந்த சூளுரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சவால் விடுக்கும் உத்தேசம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனது ஒரே பிரதிவாதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவேயாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு சவால் விடுக்கத்தயாரில்லை.

மீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைப் பெற்றுக்கொள்ளும் அவசியமில்லை.சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் நான் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வழங்கினேன்.இந்த நாட்டு மக்கள் ஜனாதிபதியை மட்டுமே மாற்றினார்கள், பிரதமரையோ அமைச்சரவையையோ கிடையாது. எனினும், ஜனாதிபதியாக பதவி ஏற்று இரண்டு நிமிடங்களில் பாய்ந்து கொண்டு ரணில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அங்கு எமது பிரதமர் பார்த்துக்கொண்டிருக்கிருந்தார், அவருக்கு தெரியாது அவர் பதவி விலக்கப்பட்டமை குறித்து. ரணில் பிரதமராக பதவியேற்று என்ன செய்தார், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை பழி வாங்கினார். உண்மையாகவே கூறுகின்றேன் கட்சித் தலைமைப் பதவியை பெற்றுக் கொள்ளும் உத்தேசம் எதுவும் கிடையாது.மைத்திரியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.