Breaking News

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்புக்கு வழங்க முடியாது- சுதந்திரக் கட்சி நிராகரிப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க முடியாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐதேகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ள நிலையில், அவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பு நேற்று கோரியிருந்தது.

இதுகுறித்து நேற்றிரவு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க, ‘எதிக்கட்சித் தலைவர் பதவி, தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காத அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்குத் தான் வழங்கப்பட வேண்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.