இனவாதத்தை கூட்டமைப்பு கக்குகின்றது: வர்ணசிங்க குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனினால் 30 வருடங்களாக நடத்தப்பட்ட யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாத ஈழத்தை,
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்போவதாக கூறி இனவாதத்தை சிலர் கக்குகின்றனர் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈழ எல்லைக்கோட்டுடன் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பே விளம்பரங்களை பிரசுரித்துள்ளது. இதன் ஊடாக மீண்டும் பிரிவினைவாத எண்ணங்களை உருவாக்குவதற்கு அந்த கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என்றும் அவர் கூறினார்.
அரசியல் இலாபத்துக்காக வடக்கில் இனவாதத்தை தூண்டும் வகையில் சம்பந்தன் உரையாற்றுவதுடன் மஹிந்த ராஜபக்ஷ தெற்கில் உரையாற்றுகின்றார். இந்த உரைகளின் ஊடாகவே நாட்டை பிரிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.