தேர்தலின் பின்னர் யாழ்.தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரர்களை தேடும் மக்கள்
பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ்பபாணத்தில் இல்லாத நிலையில் எம்.பிக்களை அவர்களுடைய அலுவலகங்களில் மக்கள் தேடி அலைவதைக் காணக் கூடியதாக உள்ளது.
இவ்வாறு எம்.பிக்களை தேடி அவர்களுடைய அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏங்கே சென்றுள்ளார்கள்? எதற்காகச் சென்றுள்ளார்கள்? என கேள்வி எழுப்புகின்ற நிலையும் ஏற்பட்டுடள்ளது.கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. ஜ.தேக மற்றும் ஈ.பி.டி.பி கட்சிகள் ஒவ்வொரு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் ஒருவர் கூட யாழ்ப்பாணம் அல்லது கிளிநொச்சி மாவட்டங்களில் இல்லை.தமது வரவேற்று நிகழ்வுகளிலல் மட்டுமே எம்.பிக்களை இறுதியாக கானமுடிந்தது என்றும் மக்கள் அங்கலாய்த்துக் கொள்ளுகின்ற நிலமை தற்போது ஏற்பட்டுள்ளது.