Breaking News

உள்ளக விசாரணையை அரசு நிறைவேற்றும் - உறுதியளிக்கின்றார் சம்பிக்க

இலங்­கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்­குற்றங்கள் குறித்த உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக புதிய அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளது. 


இந்த அர­சாங்கம் அதை முழு­மை­யாக நிறை­வேற்றும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான சம்­பிக்க ரண­வக்க தெரிவித்தார்.

தமிழ் அர­சியல் தலை­மை­களின் நம்­பிக்­கையும் அவர்கள் எதிர்­பார்க்கும் சர்­வ­தேச விசா­ர­ணை­யுமே இன்னும் நிறை வே­றாது உள்­ளது. அது நிறை­வேறக் கூடி­யதும் அல்ல எனவும் அவர் குறிப்­பிட்டார். போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்போது ஏற்பட் டுள்ள புதிய நிலைமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறு­கையில்,

நாட்டில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட­வேண்டும் என்ற போராட்டமே கடந்த காலங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அந்தப் போராட்­டத்தில் நாம் வெற்றி பெற்­றுள்ளோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வைத்து நாட்டில் பாரிய மற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். சிங்­கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் தமது ஜன­நா­யக உரி­மை­களை தடைகள் இன்றி அனு­ப­விப்­ப­தற்­கான சூழல் உரு­வா­கி­யுள்­ளது. வடக்கில் இன்று இரா­ணுவ அச்­சு­றுத்தல் என்ற குற்­றச்­சாட்டை யாரும் முன்­வை­ப­தில்லை. தமது காணி­களை விடு­விக்­கக்­கோரி யாரும் போரா­ட­வில்லை.

கடந்த ஆட்­சியில் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவ­ரது நம்­பத்­த­குந்த நபர்­களை வைத்து மேற்­கொண்ட சர்­வா­தி­கார நட­வ­டிக்­கைகள் அனைத்தும் சிறு­பான்மை மக்கள் மத்­தியில் மிகப்­பெ­ரிய தாக்­கத்தை செலுத்­தி­யது.

அந்த செயற்­பா­டுகள் சர்­வ­தேசம் வரையில் கொண்­டு­செல்­லப்­பட்டு நாட்­டுக்கு எதி­ரான மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­தல்­களை தோற்­று­வித்­தன. இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்தில் போர்க்­குற்­றங்கள் இடம்பெற்றுள்ளது என்ற குற்­றச்­சாட்டு பல ஆண்­டு­க­ளாக சர்­வ­தேச தரப்­பி­னரால் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆனால் அதற்­கான விசா­ர­ணைகள் உள்­ளக பொறி­மு­றை­களின் மூல­மாக நடை­பெற வேண்டும் என்­ப­தையே நாம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்தோம். அந்த நிலைப்­பாட்டில் இப்­போதும் எந்த மாற்­றமும் இல்லை.

எனினும் கடந்த காலங்­களில் சர்­வ­தேசம் எமக்குக் கொடுத்த கால அவ­கா­சத்தில் நாம் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­களை சரி­யாக நடை­முறைப் படுத்­தி­னோமா என்­பதில் சிக்கல் உள்­ளது. ஆயினும் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் தலை­மையின் கீழ் நாட்டில் நல்­ல­தொரு மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. இந்த மாற்­றத்தின் மூலம் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. எனினும் தமிழ் அர­சியல் தலை­மை­களின் நம்­பிக்­கையும் அவர்கள் எதிர்­பார்க்கும் சர்­வ­தேச விசா­ர­ணை­யுமே இன்னும் நிறை­வே­றாது உள்­ளது. அது நிறை­வேறக் கூடி­யதும் அல்ல.

இப்­போது வெளி­வ­ர­வி­ருக்கும் சர்­வ­தேச விசா­ரணை அறிக்­கை எவ்­வா­றானதாக அமையும் என்­ப­தைப்­பற்றி எம்மால் கணிப்­பிட முடி­யாது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் இருந்த கடு­மை­யான போக்­கினை இந்த அர­சாங்­கத்தின் ஆட்­சியில் சர்­வ­தேசம் கையா­ள­வில்லை.

மேலும் இலங்­கையில் நடை­பெற்ற போர்க்­குற்ற உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக இலங்­கையின் புதிய அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளது. இந்த அர­சாங்கம் அதை முழுமையாக நிறைவேற்றும். அதேபோல் இப்போதிருக்கும் நிலைமையில் சர்வதேசமும் எம்மீதான நம்பிக்கையை பலப்படுதியுள்ளதால் உள்ளக விசாரணைகளை சுயாதீனமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு இனி ஒரு அவசியம் இல்லை. அதை அனுமதிக்கப் போவதுமில்லை என்றார்.