சர்வதேச விசாரணைக்கு அனைத்து தரப்பினரும் வலியுறுத்த வேண்டும் - சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்
தாய்த் தமிழக உறவுகளும் புலம்பெயர்தமிழ் உறவுகளும் ஓங்கி ஒருமித்த நிலையில் குரல் கொடுப்பதன் மூலமே இலங்கை மீதான ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணையை சர்வதேச விசாரணையாக மாற்ற முடியும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்.ஊடக அமையத் தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
தெற்காசியாவுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் இலங்கை வந்திருந்தபோது தெரிவித்த கருத்துக்கள் எம்மைக் கவலையடைய செய்கின்றன. குறிப்பாக சர்வதேச விசாரணையை விடுத்து உள்ளக விசாரணை மேற்கொள்வதுடன் இலங்கை சார்பாக தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில் நாங்கள் ஒருபோதும் உள்ளக விசாரணைகளை ஏற்க முடியாது. எனவே இதனை மீண்டும் சர்வதேச விசாரணையாக மாற்றுவதற்கு ஈழத் தமிழர்களாகிய நாங்களும் எமது தொப்புள் கொடி உறவுகளான தாய்த் தமிழகமும் அங்குள்ள சகல அமைப்புக்களும் புலம்பெயர் தமிழர்களும் ஈழத் தமிழருக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் நீதி கிடைக்கவும் ஆக்ரோஷமாக போராடவேண்டும். இதன்மூலமே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வாக சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்த முடியும்.
மேலும் ரெலோ இயக்கம் சர்வதேச நீதி விசாரணையைக் கோருகின்றது என்பதனை அறிவிப்போம். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய மூன்று கட்சிகளுடனும் இவை தொடர்பான கருத்தொருமைப்பாட்டுக்கான பேச் சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின் றோம்.
மேலும் மக்கள் தளரக் கூடாது. இலங்கையர் மீதான போர் நிறுத்த விசாரணையை உள்ளக விசாரணையாக ஏற்றுக் கொள்ளமுடியாது. அது சர்வதேச விசார ணையாகவே அமைய வேண்டும். அதற்கு ஈழத்தமிழரும் தமிழக உறவுகளும் புலம் பெயர் உறவுகளும் தொடர்ந்து ஆக்ரோ ஷமாக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.