தனியொரு கட்சியின் தன்னிச்சையான செயற்பாடு கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும்
தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாட்டின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளின் மீதான மக்கள் நம்பிக்கை சீர்குலைக்கப்பட்டுவிடும் என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள் ளார்.
அதேநேரம் தன்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த பொதுமக்களுக்கும் கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலும் தற்போதுள்ள கால கட்டத்தின் பிரகாரம் எனது காத்திரமான பங்களிப்பு தேவை என்று கருதும் நிலையிலும் பல்வேறு அமைப்புக்களும் தரப்பினரும் தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் எனக்கு அளிக்கப்படவேண்டும் என அழுத்தமாகக் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதா வது,
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வட, கிழக்குத் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆணையை வழங்கியுள்ளார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., பு .ௌாட் ரெலோ ஆகிய நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாகும். தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிட்டிருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே மக்கள் வாக்களித்திருந்தனர். வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 14 ஆசனங்கள் இத் தேர்தலில் கிடைத்திருந்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும் பங்காளிக் கட்சிகள் மூன்றும் தலா இரண்டு ஆசனங்கள் வீதம் 6 ஆசனங்களையும் பெற்றிருந்தன. இவற்றின் அடிப்படையிலேயே தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.
அந்த ஆசனங்களுக்கு கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலும் தற்போது இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை இடம்பெறும் சூழ்நிலை ஒன்று ஏற்படுவதற்கான நிலைமைகள் இருப்பதால் அதில் எனது காத்திரமான பங்களிப்பு தேவை எனவும் பங்காளிக்கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் தரப்பினர்களும் வலியுறுத்தினர்.
ஆனால் தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துள்ளதோடு அதனை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றது.நாம் பெண் பிரதிநிதித்துவம் ஒன்று தேவை என்ற கருத்து க்கோ அல்லது திருமலை மாவட்டத்திற்கு மேலும் ஒரு பிரதிநிதித்துவம் அவசியம் என்ற கருத்துக்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால் கூட்டமைப்பின் ஏக முடிவாக அவை அமைந்திருக்கவேண்டும்.
அதனை விடுத்து தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்பட்டு அதனை கூட்டமைப்பின் முடிவாக காண்பிக்க முயல்வது தவறானதாகும். இலங்கைத் தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக செயற்படுமாக இருந்தால் கூட்டமைப்பில் இயங்கும் பங்காளிக் கட்சிகள் மீதும் ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் உள்ள பொதுமக்கள் நம்பிக்கை சீர்குலைக்கப்பட்டுவிடும்.
ஆகவே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தேசியப்பட்டியல் பிரதிநிதித் துவங்களைத் தெரிவுசெய்தல், முன் வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாப னத்தை நடைமுறைப்படுத்தல், இனப் பிரச்சினைக்கான தீர்வுபோன்ற விட யங்களில் தனித்துவமாக காட்டுவதற் காக தன்னிச்சையாக தனியொரு கட்சி செயற்படுவதை விடுத்து கூட்டமைப் பாக ஒற்றுமையுடன் செயற்பட வேண் டும் என்றார்