Breaking News

தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படாது! ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் அமெ­ரிக்­காவின் அணு­குமு­றையில் ஏற்பட் டுள்ள மாற்றத்தால் தமி­ழர்­க­ளுக்கு எந்­த­வொரு அநீ­தியும் ஏற்­ப­டாது.

புதிய அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை வையுங்கள் என முன்னாள் நிதி அமைச்­சரும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

தமி­ழர்­க­ளுக்காக நாம் குரல் கொடுத்­துள்ளோம். ஆகவே உள்­ளக பொறி­மு­றையினூடாக தமிழ் மக்­க­ளுக்கு உரிய தீர்­வினை முன்­வைப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் அமெ­ரிக்­கா­வினால் இலங்­கைக்கு ஆத­ர­வாக ஐக்­கிய நாடுகள் மனித பேர­வையில் விசேட பிரே­ரணை சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யுத்­தத்­தினால் பாதிப்­புக்­குள்­ளான தமிழ் மக்­க­ளுக்கு அநீதி ஏற்படுமா? என்று ஊடகவியலாளர்கள் வின­வி­ய­போதே ரவி கரு­ணா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற இறுதி யுத்­தத்தின் போது யுத்­தக்­குற்­றங்கள் இடம்­பெற்­ற­தாக பர­வலாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் சர்­வ­தே­சத்தின் அவ­தானம் முழு­மை­யாக இலங்­கையின் பக்கம் திரும்­பி­யுள்­ளது.

சர்­வ­தே­சத்­தை எதிர்கொள்வதற்காக முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளினால் சீரான திட்­டங்கள் வகுக்­கப்­ப­ட­வில்லை. சர்­வ­தே­சத்­துடன் முன்­னைய ஆட்­சி­யாளர் இணங்கி செயற்­ப­டா­மை­யினால் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. ஆகவே சர்­வ­தேச விசா­ர­ணைக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவே பிர­தான கார­ண­மாகும்.

சர்­வ­தேச விசா­ர­ணை­யி­லி­ருந்து இலங்­கையை பாது­காக்க வேண்­டிய நிலைமை எமக்கு ஏற்­பட்­டது. இதற்­கான பாரிய பொறுப்பை மக்கள் எங்கள் மீது சுமத்­தி­யுள்­ளனர். ஆகவே அதனை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

எனினும் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் யுத்த குற்­றங்கள் உள்­ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெ­ரிக்கா தனது அணு­கு­மு­றை­யினை மாற்றியுள்ளது. அதாவது இலங்கை ஆத­ர­வாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் விசேட பிரே­ரணை ஒன்றை முன்­வைக்­க­வுள்­ள­தாக இலங்­கைக்கு விஜயம் செய்­திருந்த தென் மற்றும் மத்­திய ஆசிய நாடு­க­ளுக்கு பொறுப்­பான அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜங்க செய­லாளர் நிஷா பிஷ்வால் குறிப்­பிட்­டுள்ளார்.

யுத்த குற்றம் தொடர்பில் அமெ­ரிக்கா இலங்­கைக்கு ஆத­ர­வாக செயற்­படும் வகையில் பிரே­ரணை சமர்­பிப்­ப­தனால் யுத்­த­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு எந்­த­வொரு அநீ­தியும் இழைக்­கப்­ப­ட­மாட்­டாது. தமிழ் மக்­க­ளுக்­காக அனைத்து சந்­தர்ப்­பத்­திலும் ஐக்­கிய தேசியக் கட்சி குரல் கொடுத்து வந்­துள்­ளது. ஆகையால் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக புதிய அர­சாங்கம் ஒரு­போதும் செயற்­ப­ட­மாட்­டாது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை நம்பவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தேசிய பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்குவார்கள். மேலும் யுத்த குற்றம் இடம்பெற்றதாக கூறப்படுவது தொடர்பில் உள்ளக விசாரணை பொறிமுறையை நாம் கட்டமைப்போம் என்றார்.