இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் -சங்கா
இளைஞர்கள் அதிகளவில் அரசியலில் பிரவேசிக்க வேண்டுமென நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
அரசியலில் பிரவேசிக்கும் உத்தேசம் எதுவும் எனக்குக் கிடையாது. இலங்கையில் இளைஞர்கள் எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசித்து சேவையாற்றுவார்கள். அரசியல் குறித்து சரியாக சிந்தித்து, தங்களது நாடு மற்றும் சமூகத்தை கருத்திற் கொண்டு சரியாக பணிகளை ஆற்றும் நோக்கில் இளைஞர்கள் அரசியலில் களமிறங்குவார்கள் என கருதுவதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.