Breaking News

சந்திரிகா,மைத்திரி, ரணில் நேற்றிரவு சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்தே இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் நியமனம், பதவியேற்பு, மற்றும் அமைச்சுக்கள் ஒதுக்கீடு குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் புதிய அமைச்சரவை பதவியேற்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.45 பேர் கொண்ட அமைச்சரவையை அமைப்பது என்றும், அதில் 30 பேர் ஐதேகவினரும், 15 பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும் இடம்பெறுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், அமைச்சரவை பதவியேற்பு அடுத்தமாதம் 2ஆம் நாளே நடக்கவுள்ளது. இந்த நிலையிலேயே இழுபறிகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.