அரசியலிலிருந்து ஓய்வுபெறுகிறார் மஹிந்த
எதிர்வரும் மூன்று மாத கால பகுதிக்குள் அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது இரண்டு சகோதரிகளின் ஆலோசனையின் பேரில் தாம் இந்த முடிவை எடுத்ததாக, அண்மையில் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த போததே அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் தோல்வியையடுத்து அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போவதாக மஹிந்த அறிவித்திருந்தபோதும், பின்னர் மக்களுக்காகவும், நாட்டின் நன்மை கருதியும் மீண்டும் அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்திருந்தார்.
எனினும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரால் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில், கடந்த காலத்தில் இவர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தற்போத பன்மடங்காக அதிகரித்துள்ளன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தாம் ஓய்வுபெறப் போவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது