ஐ.நா. விசாரணை அறிக்கை சிலதினங்களில் ஜனாதிபதி மைத்திரியிடம் கையளிக்கப்படும்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் நடத்திய விசாரணையின் அறிக்கை சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றது.
விசேடமாக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இல ங்கையின் சார்பில் உயர்மட்ட தூதுக்குழு அதில் கலந்துகொள்ளவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு இம்முறை ஐ.நா. மனித உரிமை பேரவையின் 20 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ள நிலையிலேயே அவர் அவசரமாக அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
எதிர்வரும் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பிக்கவு ள்ள நிலையில் இலங்கை குறித்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி விவா தம் நடத்தப்படவுள்ளது.
அத்துடன் முதல் நாள் அமர்வின்போது உரையாற்றவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூன் உள்ளிட்டவர்கள் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கவுள்ளனர். அத்துடன் அன்றைய தினம் அமைச்சர் மங்கள சமரவீர வும் உரையாற்றவுள்ளார்.
இதேவேளை செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கை தொடர்பில் நடத்தப்படும் விவாதத்திலும் ஆணையாளர் அல் ஹுசேன் மற்றும் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
அத்துடன் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை மீதான அமர்வில் உரையாற்றவுள்ளனர். இறுதியில் இலங்கையின் சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர பதிலளித்து உரையாற்றவுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 28ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்போடப்பட்டது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேரவையின் தலைவருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இலங்கை குறித்த அறிக்கை செப்டெம் பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது.
நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலு த்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூற ப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அலுவலகம் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி கடந்த 2014ஆம் ஆண்டு ஜெனிவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதி ர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்து டன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தன.
அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை செயற்பாடுகள் செயற்பாட்டு ரீதியாக ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக 12 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிபுணர் குழுவில், சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், பின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அதிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
2014ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் அலுவலகத்தின் இலங்கை விவகாரம் குறித்த விசாரணை செயற்பாட்டு காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஜனவரி மாதம் ஆகும்போது விசாரணை அறிக்கை தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகள் இலங்கை வராமலேயே விசாரணைகளை முன்னெடுத்தனர். காரணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மற்றும் விசாரணைக் குழு என்பனவற்றை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்திருந்தது. அந்தவகையிலேயே தற் போது இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதுடன் சில தினங்களில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ளது.
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இல ங்கைக்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு விளக்க மளிக்கும் செயற்பாடுகளை விரைவில் முன்னெடுக்கவுள்ளார். அனைத்து உறுப்பு நாடுகளினதும் பிரதிநிதிகளையும் அவர் விரைவில் சந்தித்து உரையாடவுள்ள தாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.