கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விடயம் - நீதிமன்றில் மனுத் தாக்கல்
இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசியப் பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்ற சிலர் இணைக்கப்பட்டமைக்கு சவால் விடுக்கும் வகையில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகஜன எக்சத் பெரமுனவின் சோமவீர சந்திரசிறியால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தேர்தலில் தோற்ற சிலர் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் சோமவீர சந்திரசிறியால் உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.