கூட்டமைப்பைச் சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலை இன்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ள நிலையில், குறித்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 33ஆவது அமர்வில் நேற்று கலந்து கொண்ட முதலமைச்சர், காலை 10.45 மணியளவில் மேற்படி சந்திப்பிற்காக கொழும்பு செல்லவுள்ளமை தொடர்பாக அறிவித்ததன் பின்னர் சபையிலிருந்து வெளியேறினார். இதேவேளை இன்றைய தினம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் முதலமைச்சர் கலந்து கொள்வார் எனத் தெரியவருகிறது.