ரணில் துரத்தி துரத்தி பழிவாங்க மாட்டார்! மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியலில் ஈடுபடுவது சுலபமானது என வும் அவர் துரத்தி துரத்தி பழிவாங்க மாட்டார் என்றும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் குமார வெல்கம எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என என்னிடம் கூறியுள்ளனர்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.