Breaking News

தேசிய அரசாங்கத்தில் இணைகிறது ஈபிடிபி – டக்ளசுக்கு அமைச்சர் பதவி

இலங்கையில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்த டக்ளஸ் தேவானந்தா அதையடுத்து,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை டக்ளஸ் தேவானந்தா அண்மையில் சந்தித்துப் பேசியதை, அவரது ஊடகப் பேச்சாளர் நெல்சன் எதிரிசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனித்துப் போட்டியிட்ட ஈபிடிபி, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை மட்டும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.