நாளை கூட்டமைப்பைச் சந்திக்கிறார் நிஷா
இரண்டு நாள் பயணமாக இலங்கை வரவுள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இன்று கொழும்பு வரும், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், இலங்கை அரசாங்க தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அதேவேளை, நாளை காலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அவர் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவும் திட்டமிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 16 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டிய பின்னர், மேற்கொள்ளும் முக்கியமான முதல் இராஜதந்திர சந்திப்பு இதுவாகும்.
இந்தச் சந்திப்பில், இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி