அமைச்சரவை சத்தியப்பிரமாணம் பிற்போடப்பட்டது!
புதிய அமைச்சின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வுகளை சில கட்டங்களாக நடத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளதாக, தகவல் வௌியாகியுள்ளது.
இதன்படி எதிர்வரும் வியாழன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் குறித்த நிகழ்வு இடம்பெறும் எனத் தெரிகின்றது. அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்து ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சிக்கல் தற்போது பெருமளவு தீர்க்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை அளவில் இது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது.