Breaking News

இலங்கை வந்தார் நிஷா பிஸ்வால்

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

அவர் இன்று அதிகாலை 03.25 அளவில் நாட்டுக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவருடன் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் சிலரும் வருகை தந்துள்ளனர்.  நிஷா பிஸ்வால் இன்று வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளார்.   அத்துடன் இவர் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.