Breaking News

இனப்­பி­ரச்­சினை குறித்து கால அட்­ட­வ­ணையின் பிர­காரம் பேச்­சு­வார்த்தை ஆரம்­பிக்­கப்­ப­ட­வேண்டும்

எமது இனப்­பி­ரச்­சினை இழுத்­த­டிப்­புக்கள் இல்­லாமல் ஒரு கால அட்­ட­வணை உரு­வாக்கி பேச்­சு­வார்த்தை ஆரம்­பிக்­கப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்ள இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா ,

தேர்தல் அறிக்­கையின் பிர­காரம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எதிர்­காலச் செயற்­பா­டுகள் தொடர்பில் அரசு சர்­வ­தேச சமூகம், புலம் பெயர் சமூகம், புத்­தி­ஜீ­விகள் இளம் சமூ­கத்­துடன் சந்­திப்­புக்கள், கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு அடுத்த கட்ட நகர்வை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் தெரி­வித் தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அடுத்த கட்ட நகர்வு தொடர்­பாகக் கருத்து வெளியி­டும்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில்,

புதிய மாற்­றத்­திற்கு பின்னர் புதிய பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார்கள். வடக்­கு­கி­ழக்கில் எத்­த­னையோ குழப்­பங்கள் திட்­ட­மிட்ட பொய்ப் பிர­சா­ரங்கள் தமிழத் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தி­நி­திகள் மீது சுமத்­தப்­பட்­ட­போதும் எம்­மு­டைய மக்கள் மிக நிதா­ன­மாக தங்­க­ளு­டைய திட­சங்­கற்பம் மீதும் தங்­க­ளு­டைய இலக்கை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புத்தான் தங்கள் பிர­தி­நி­திகள் என்று தமது அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளார்கள்.

நாங்கள் எமது தேர்தல் அறிக்­கையில் தெரி­வித்­த­வாறு இனப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­ப­டவும் நில­அ­ப­க­ரிப்பு நிறுத்­தப்­பட்டு அப­க­ரிக்­கப்­பட்ட நிலங்கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும். அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­பதில் உறு­தி­யா­க­வுள்ளோம்.

குறிப்­பாக ஜன­வரி 8ஆம் திக­திக்குப் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா ஆகி­யோ­ருடன் பல்­வேறு கட்டப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்தோம். இந்­நி­லையில் புதிய ஆட்சி அமை­ய­வுள்ள ஆட்­சி­யு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­ள­வுள்ளோம்.

புதிய ஆட்­சியும் எமது தேர்தல் அறிக்­கையில் கூறப்­பட்ட விட­யங்­களை ஏற்றுக் கொள்­வார்கள்.

எமது இனப்­பி­ரச்­சினை இழுத்­த­டிப்­புக்கள் இல்­லாமல் ஒரு கால அட்­ட­வணை உரு­வாக்கி பேச்­சு­வார்த்தை ஆரம்­பிக்­கப்­ப­ட­வேண்டும். இவை நடை­பெறும் காலத்தில் எமது அன்­றாட பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­ப­ட­வேண்டும். மேலும் வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள், இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு உரு­வாக்­கவும் குறிப்­பாக சர்­வ­தே­சத்­துடன் இணைந்து பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்கவும் முயற்சி மேற்­கொள்­ளப்­படும்.

புதிய பாரா­ளு­மன்ற அமர்­வுகள் ஆரம்­ப­மான பின்னர் எம­து­மக்­களை கிரா­மங்கள் தோறும் சென்று தமது தேவைகள் தொடர்­பிலும் அவ­சர அவ­சிய விட­யங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­தவும் தேர்தல் காலத்தில் மக்­க­ளாலும் இளம் சமு­தா­யத்­திலும் முன்­வைக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­க­ளுக்கு ஏற்ப நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம்.

எங்­க­ளு­டைய இனப் பிரச்­சினை அன்­றாட பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்வதில் தமிழர்கள் முஸ்லிம்கள் அவர்களது அரசியல் கட்டமைப்புகளுடனும் எமது ஆலோசனை முன்வைக்கவுள்ளதுடன் இனப்பிரச்சினைத் தீர்வு தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த சமூகம் புத்திஜீவிகள் மத்தியில் சென்று எமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கு கலந்து ரையாடல்களை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.