Breaking News

கூட்டமைப்பு, ஜே.வி.பி.,எம்முடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரி ஆட்சியமைக்க வேண்டும்

ஜனா­தி­பதி ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னான உறவைக் கைவிட்டு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜே.வி.பி மற்றும் எம்­முடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்க முன்­வர வேண்­டு­ம் என்று முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார வலியுறுத்தியுள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கு அதிக அமைச்சர் பதவிகளை வழங்கும் போராட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்க நாம் தயா­ரா­க­வுள்ளோம் என்றும் அவர் தெரி­வித்தார். இது தொடர்­பாக வாசுதேவ நாணயக்கார மேலும் தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி மைத்­திரி பால­சி­றி­சேன ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து அர­சாங்கம் அமைப்­பதை நாங்கள் எதிர்க்­கின்றோம், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் எம்­மோடும், அதற்கு மேலாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பையும், ஜே.வி.பியையும் இணைத்துக் கொண்டு ஆட்­சி­ய­மைக்க முன்­வர வேண்­டு­மென நான் அழைப்பு விடுக்­கின்றேன்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்க மக்கள் வாக்­க­ளிக்­க­வில்லை.எனவே அவ்­வாறு ஆட்­சி­ய­மைக்க முயற்­சிப்­பது மக்கள் ஆணையை மீறும் செய­லாகும், அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சார்ந்­தோ­ருக்கு அதிக அளவு அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­பட வேண்­டு­மென்ற விட­யத்தில் எமது ஆத­ரவு சுதந்­திரக் கட்­சிக்கு கிடைக்கும்.

எனவே ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் ஆட்­சி­ய­மைப்­பது தொடர்பில் சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு எடுத்த தீர்­மா­ன­மா­னது மக்­களின் வாக்­கு­ரி­மையை பலாத்­கா­ர­மாக துஷ்­பி­ர­யோகம் செய்­துள்­ளது.

இவ்­வி­ட­யத்தில் ஜனாதிபதியும் கட்டளை பிறப்பிப்பவராக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.