மகிந்த எதிர்க்கட்சித் தலைவராக முடியாது – சந்திரிகா
எந்தச் சூழ்நிலையிலும், மகிந்த ராஜபக்சவினால், எதிர்க்கட்சித் தலைவராக வர முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களிடமே, அவர் நேற்று முன்தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராவதற்கு இடமளிப்பதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே முடிவு செய்து விட்டார். அவர் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பார். தோற்கடிக்கப்பட்ட தலைவர், கட்சியை அழிப்பதற்கு மூத்த தலைவர்கள் இடமளிக்கக் கூடாது என்றும் சந்திரிகா கேட்டுக் கொண்டுள்ளார்.