மகிந்தவிற்கும் மைத்திரிக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று (23) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 7 பெஜட் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு தனிப்பட்ட ரீதியான சந்திப்பு என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் என்ன விடயங்கள் பற்றி இருவரும் பேசிக் கொண்டனர் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. நேற்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற சந்திப்பு சுமார் அரை மணித்தியாலம் வரையில் நீடித்தது எனத் தெரியவருகிறது.