Breaking News

தேசிய பட்டியல் குறித்து த.தே.கூ இன்று முடிவு!

தேசிய பட்டியல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றிய நிலையில், இரண்டு மேலதிக ஆசனங்கள் வழங்கப்பட்டன. அவற்றுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையில், இன்றையதினம் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களுக்கும், நடைபெற்று முடிந்த தேர்தலில் தோல்வியுற்ற வினோநோகராதலிங்கம் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோருக்கு வழங்குமாறு கோரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அநேரம் இரண்டு பெண் உறுப்பினர்களுக்கு வழங்குமாறும், அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆசனம் ஒன்றை வெல்ல முடியாதுள்ள அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குமாறும் வெவ்வேறு தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்றையதினம் இது குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்காக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலையில் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.