Breaking News

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க மஹிந்த தயார் - வாசு­தேவ நாண­யக்­கார

எதிர்­க்கட்சித் தலைவர் பத­வியை ஏற்­றுக் கொள்­வ­தற்கு மஹிந்த ராஜபக்ஷ  இணங்­கி­யுள்­ள­தாக முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித் தார். இந்த ஆட்­சியின் ஆயுட்காலம் வெகுவிரைவில் வீழ்ச்­சி­ய­டைந்­து­விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்­பாக முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­ய­க்கார மேலும் தெரி­விக்­கையில், இந்த ஆட்­சியை தேசிய அர­சாங்கம் என்று கூற முடி­யாது.ஐக்­கிய தேசியக் கட்­சியின் "வாலாக" சிறி லங்கா சுதந்­திரக் கட்சி இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. இவர்களால் நாட்டின் பிரச்­சி­னை­களையும் தீர்த்துவைக்க முடி­யாது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனியார் "கம்­ப­னிக்­காரர்களின்" தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கே முத­லிடம் வழங்கும். இதனால் அரச ஊழியர்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள், மக்­களின் வாழ்க்கைச் செலவு அதி­க­ரிக்கும், நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டையும், வட­மா­காண தமிழர்களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கப் போவ­தில்லை.

எனவே விரைவில் இந்த ஆட்சி வீழ்ச்­சி­ய­டையும் , அதன்­பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவை பெற முயற்­சித்­தாலும் அதுவும் கைகூ­டப்­போ­வ­தில்லை. சம்­பிக ரண­வக போன்ற கடும் போக்குச் சக்­திகள் இதனை எதிர்ப்­பார்கள். எனவே கூட்­ட­மைப்பின் ஆத­ர­வு­டனும் ஆட்­சியை முன்­னெ­டுக்க முடி­யாது.

மஹிந்த ராஜ­பக்ஷ எதிர்­கட்சித் தலைவர் பத­வியை ஏற்க விருப்பம் தெரி­வித்­துள்ளார். எனவே பாராளுமன்றத்தில் பலமுள்ள எதிர்கட்சியாக நம் செயற்படுவோம் என்றார்.