நாடு பிளவடைய அனுமதியளிக்கப்பட மாட்டாது -பிரதமர் ரணில்
நாடு பிளவடைய அனுமதியளிக்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சத்தியக் கடதாசி ஒன்றின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உறுதிமொழி ஒன்றை வழங்கியுள்ளார்.
நாட்டுக்குள் தனி நாடு ஒன்றை உருவாக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பிரதமர் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் சாசனத்திற்கு அமைவாகவும் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும் கடமையாற்றுவேன் என தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை பேணிப் பாதுகாத்து அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்என உறுதியளித்துள்ளார்.
மேலும், இலங்கைக்குள் வேறும் ஓர் நாட்டை உருவாக்க நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு உள்ளோ அல்லது வெளியிலோ நாட்டை பிளவுடுத்த எந்தவகையிலான உதவிகளையோ, நிதி உதவிகளையோ அல்லது நாடு பிளவடையக் கூடிய வகையிலான உரைகளோ ஆற்றப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.