புதிய அமைச்சரவை 2ம் திகதி சத்தியப்பிரமாணம்
புதிய அமைச்சரவை செப்டம்பர் 2ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் முதல் முறையாக செப்டம்பர் முதலாம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது.
இந்த தருணத்தில் இதுவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வௌிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர, நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சராக டீ.எம்.சுவாமிநாதன் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.