Breaking News

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்

2009ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என முன்னாள் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டில் இலங்கைக்கு ஆதரவான வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அ வர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலப் பகுதியில் மஹிந்த சமரசிங்க, மனித உரிமை விவகார அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்மானம் முழுமையாக அமுல் படுத்தப்பட்டிருந்தால் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும் என அ வர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2009ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போதும், அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.நல்லிணக்கத்தை முதன்மைப்படுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானத்திற்கு ஆதரவு கிடைத்தால், அதனை முழுமையாக அமுல்படுத்த அரசாஙக்ம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து இன சமூகங்களினதும் நம்பிக்கையை கட்டியெழுப்பக் கூடிய வகையில் சுயாதீனமான உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.