இலங்கை மக்களின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளது அமெரிக்கா
ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது இலங்கை மக்கள் ஜனநாயகத்துக்காக அர்ப்பணிப்பை செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜோன் கிர்பி செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர், சமூக குழுக்கள், பொதுமக்கள், வேட்பாளர்கள் அனைவரும் அமைதியான தேர்தல் ஒன்றுக்காக பாடுப்பட்டனர் என்று கிர்பி குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக இலங்கையின் வரலாற்றில் அமைதியான நியாயமான தேர்தல் ஒன்று நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா, தொடர்ந்தும் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இணைந்து செயற்படும் என்றும் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.