தீயினால் 15 கடைகள் சேதம்
அம்பாறை - டி.எஸ் சேனநாயக்க வீதியில் உள்ள 15 கடைகள் இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.