Breaking News

100 நாள் அரசாங்கத்தின் செயலாளர்கள் நீக்கப்படுகின்றனர்! -பிரதமர் நடவடிக்கை

100 நாள் அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்களுக்கு செயலாளர்களாக பணியாற்றிய அநேகரை தமது புதிய அரசாங்கத்தில் செயலாளர்களாக நியமிக்காதிருக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அந்த அரசாங்கத்தில் செயலாளர் பதவி வகித்த ஒருவருக்கெதிராக நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் விசாரணைகள் நடைபெற்றுவருவதால் அவரை மீண்டும் செயலாளராக நியமிப்பதில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

மற்றுமொரு செயலாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கு புறம்பாக செயற்பட்டதால் அவரையும் மீண்டும் பதவியில் நியமிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிதாக பேசப்பட்ட 12 செயலாளர்களின் பெயர்ப் பட்டியல் ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்திருப்பதாகவும் இவர்களை மீண்டும் நியமிக்காதிருக்கவும் பிரதமர் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதற்குப் பதிலாக நிர்வாக சேவையில் திறமையான, இளைய அதிகாரிகளை அமைச்சின் செயலாளர்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.அரச சேவையை செயல்திறன்மிக்கதாக மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.