100 நாள் வேலைத்திட்டத்தில் 92 பேர் கொலை - டிலான் பெரேரா குற்றச்சாட்டு
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் பாதாள கோஷ்டியினர் எவ்வாறு செயற்பட்டார்களோ அதே பாதாள கலாசாரமே இன்றும் செயற்படுகின்றது. 100 நாள் வேலைத்திட்டத்தில் இன்று வரை 92 பேர் கொலை செய்யப்பட்டுள்ளர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் வங்குரோத்து காரணமாக சடலம் தோண்டும் நிலைக்கு வந்துள்ளது எனவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.