Breaking News

நாட்டைப் பிரிப்பதற்கு முயல்கிறார் ரணில்

நல்­லாட்சி என்ற பெயரில் நாட்டை பிரிக்கும் வேலை­யினை பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்க செய்து வரு­கின்றார். 





மீண்டும் ரணில் கையில் ஆட்­சியை கொடுத்தால் நாட்டை புலி­களின் கால­னித்­துவ நாடாக மாற்­றி­வி­டுவார். ஆகவே, மக்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்கும் இறுதி வாய்ப்பை தவ­றாக பயன்­ப­டுத்­தி­விட வேண்டாம் என தேசிய சுதந்­ திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சி யின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

வெற்றிக்கனவில் இருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு இம்­முறை தோல்­வியை தாங்­கிக்­கொள்ள முடி­யாது போயுள்­ளது. அதற்கு கார­ணமும் உள்­ளது. கடந்த பல ஆண்­டு­க­ளாக தோல்­வியில் சலித்துப் போயி­ருந்த ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு திடீ­ரென எதிர்­பா­ராது கிடைத்த வெற்­றி­யினால் தாம் என்ன செய்­வது என்­பது அறி­யாது திகைத்துப் போயுள்­ளனர்.

தமக்கு கிடைத்­துள்ள அமைச்சுப் பத­விகள் மூலம் உச்­ச­கட்ட பயனை அடை­கின்­ற­னரே தவிர நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் எவ்­வித நன்­மை­களும் கிடைக்­க­வில்லை. ஆகவே கிடைத்­தி­ருக்கும் சுக­போக வாழ்க்­கையை உடனே இழந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக அரச உடை­மை­க­ளையும் சொத்­துக்­க­ளையும் பயன்­ப­டுத்தி ஆட்­சியை தக்­க­வைக்கும் முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றனர். எம்மை விமர்­சித்துக் கொண்டே ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் ஜன­நா­ய­கத்­தையும், சட்­ட­திட்­டங்­க­ளையும் மீறு­கின்­றனர்.

என்ன செய்­தேனும் ஆட்­சியை கைப்­பற்­றலாம் என ஐக்­கிய தேசியக் கட்சி காணும் பகல் கன­வுக்கு நாம் இம்­முறை முற்­றுப்­புள்ளி வைப்போம். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தோல்­வியை தடுக்க முடி­யாது. ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நூறுநாள் வேலைத்­திட்­டமும் அதன் பின்­ன­ரான இரண்டு மாத­கா­லமும் மக்­களை முழு­மை­யாக ஏமாற்றி விட்­டது.

இந்த 180 நாட்கள் வெறு­மனே வீண­டிக்­கப்­பட்ட நாட்­க­ளா­கவே மக்கள் உண­ரு­கின்­றனர். அதேபோல் நாம் வென்­றெ­டுத்த சமா­தானம், தேசியப் பாது­காப்பு ஆகி­யவை ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆறு மாத­கால ஆட்­சியில் சிதை­வ­டைக்கப் பட்­டுள்­ளது. வடக்கில் மீண்டும் தேசியப் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது, தேசிய பொரு­ளா­தார மட்டம் வீழ்ச்சி கண்­டுள்­ளது, நல்­லாட்சி என்று வாய்­கி­ழியப் பேசு­கின்­றனர் ஆனால் இந்த ஆறு மாத­கா­லத்தில் இலங்­கைக்கு கொண்­டு­வந்­தி­ருக்கும் போதைப்­பொ­ருளின் அளவு கடந்த ஆண்டில் முழு­மை­யாக அந்த ஆண்டில் கொண்­டு­வந்­ததை விடவும் இரண்டு மடங்கு அதி­க­மாகும். இவ்­வா­றான நிலையில் தொடர்ந்தும் ரணில் கையில் ஆட்­சியை கொடுத்தால் இந்த நாடு மிகவும் மோச­மான விளை­வு­களை சந்­திக்­க­வேண்டி வரும்.

மேற்கு உலக நாடு­களும் புலிகள் அமைப்பும் தமது கால­னித்­துவ நாடாக இலங்­கையை மாற்­றி­விடும் நிலையும் ஏற்­படும். ஆகவே நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்தி நாட்டை சரி­யான பாதையில் கொண்­டு­செல்ல மக்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்கும் இறுதி சந்­தர்ப்பம் இது­வாகும்.

இதை தவ­ற­விட்டால் மீண்டும் நாடு பாரிய விளை­வு­க­ளுக்கு முகம் கொடுக்­க­வேண்­டி­வரும் என்­பதை மக்கள் மறந்­து­விட வேண்டாம். கடந்த 2001 ஆம் ஆண்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இருந்த போது விடு­தலைப் புலி­களை ஆத­ரித்தார். அதன் விளைவு அவரை ஆத­ரித்த மக்­களே அவரை தோற்­க­டித்­தனர்.

இம்­முறை சர்­வ­தேச புலிகள் அமைப்­பு­க­ளுடன் ஐக்­கிய தேசியக் கட்சி உடன்­ப­டிக்­கை­களை செய்­துள்­ளது. 2001 இல் பிர­த­ம­ருக்­கான அதி­கா­ரங்கள் எதுவும் இருக்­க­வில்லை, நிறை­வேற்று ஜனா­தி­ப­தியின் கையில் அதி­காரம் இருந்த நிலையில் ரணில் புலி­க­ளுடன் உடன்­ப­டிக்கை செய்­து­கொண்டார். அதி­காரம் இல்­லாத போதே அவர் பிரி­வி­னையை ஆத­ரிக்கும் தலை­வ­ராக செயற்­பட்டார்.

இப்போது பிரதமர் நாட்டின் அதிகாரம் மிக்க நபர். இந்த நிலையில் ரணிலிடம் அதிகாரம் வழங்கப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் மக்கள் புலிகளை ஆதரிக்கின்றீர்களா என்பதை இம்முறை தேர்தலின் மூலம் வெளிப்படுத்துங்கள் எனக் குறிப்பிட்டார்.