கைச்சாத்திட்டார் மஹிந்த! குருணாகலில் போட்டி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் நோக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியின் வேட்பாளர் பட்டியலில் நேற்று கைச்சாத்திட்டுள்ளார்.
அதேவேளை, மஹிந்த ஆதரவு கூட்டணியின் பல முக்கியஸ்தர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் கைச்சாத்திட்டுள் ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது ஆதரவுக் கூட்டணியினருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமா இல்லையா என்ற கேள்வி நிலவி வந்த நிலையில் தற்போது இவர்கள் வேட்பு மனுக்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
நேற்று மஹிந்த ராஜபக் ஷ தனது ஆதரவு அணியினரை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் பின்னரே அவர் வேட்புமனுவில் கைச்சாத்திட்டதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. அதேபோல் மஹிந்த ஆதரவுக் கூட்டணியின் உறுப் பினர்களான விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க, தினேஷ் குணவர்த்தன ,உதய கம்மன்பில, உள்ளிட்ட பலரும் நேற்றைய தினம் வேட்புமனுக்களில் கைச்சாதிட்டுள்ளனர். அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலரும் நேற்றைய தினம் அதிகாரபூர்வமாக வேட்பு மனுவில் கைச்சாத்திட்டனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக் ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கொழும்பில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி வேட்பாளர் பட்டியல் எதிர்வரும் 13ஆம் திக்கி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்போதே கட்சியின் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது தெரியவரும்.
இது தொடர்பில் நேற்று அபயராம விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிடுகையில்; ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் முன்னா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நாம் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்மை கைவிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்துவதில் கட்சிக்கு உள்ளும் கட்சிக்கு வெளியிலும் சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது உண்மையாகும். ஆனால் தலைமைத்துவ சிக்கல் ஒன்று ஏற்படவில்லை. கடந்த காலங்களில் ஊடகங்களில் பல முரண்பாட்டுக் கருத்துக்கள் வெளிவந்தது.
ஆனால் அவை அனைத்துக்கும் இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த ராஜபக் ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அதேபோல் மஹிந்த அதரவு அணியினர் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பலமான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் களமிறங்கும்.
அதேபோல் யாரை கட்சியின் இணைத்துக் கொண்டுள்ளனர், யார் நிராகரிக்கப் பட்டுள்ளனர் என்ற பல விமர்சனங்கள் ஊடகங்களில் வெ ளிவருகிறது. இந்த விடயம் தொடர்பில் எம்மால் எதையும் இப்போதைக்கு குறிப்பிட முடியாது. எதிர்வரும் 13ஆம் திகதி இறுதியான வேட்புமனு பட்டியல் தாக்கல் செய்யப்படும். அப்போது அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.
.