தெற்கு மாற்றம் வடக்கிலும் வருகிறதா? யாழ் பல்கலை தேர்தல் களத்தில்?
அண்மையில் தெற்கில் இடம்பெற்ற அரசியலில் மாற்றம் வடக்கிலும் ஏற்படவேண்டும் என்ற மன மாற்றம் சில தரப்புக்களில் வடக்கிலும் ஏற்பட்டு வருவதை அவதானிக்கமுடிகின்றது.
இது தொடர்பில் த.தே.கூட்டமைப்பில் இடம்பெறும் உட்கட்சி போட்டிகள் அதிகரித்து வருகின்ற வேளையில் அதற்கு மாற்று வலுவான உறுதியான கொள்ளையுடன் பயணிக்கும் த.தே.மக்கள் முன்னணியினருக்கான ஆதரவு தளம் அதிகரித்து வருகின்றது.
அதற்கான ஆதரவை பல்கலைக்கழக சமூகம் வழங்கும் வகையில் பல்கலை கழக முன்னாள் ஆசிரியர் சங்கத்தலைவர் ராஜகுமாரன் மற்றும் மாணவர் தரப்பிலிருந்தும் முக்கியமான தரப்பினரும் முன்னாள் போராளிகளில் சிலரும்(வித்தியாதரன் கட்சியல்லாத) களத்தில் குதிப்பதற்கு முடிவுகள் எட்டப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் நாளை முக்கிய தரப்புக்களை இணைத்து வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவிலும் கலந்துரையாடல்
நேற்று ( 11-07-2015) மாலை 3.00 மணியளவில் பிறம்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மண்டபத்தில் மாற்றத்திற்கான குரல் மக்கள் விழிப்புணர்வுக்கருத்தரங்கு இடம் பெற்றது. இந்நிகழ்வினை மாற்றத்திற்கான குரல் கனடாவிற்கான செயற்பாட்டாளர்களாகிய திரு பொன்னையா விவேகானந்தன், திரு. பிரணவ ஸ்ரீறி – ஐயாத்துரை ( பீற்றர்), மற்றும் திரு.மதியழகன் சிறிபாலன் ஆகியோரினது ஏற்பாட்டில் இடம்பெற்றது.
முக்கியமாக தாயகம், தேசியம், தன்னாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமையினுாடாக தமிழர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் புலம்பெயர் வாழும் உறவுகள் யாவும் இணைந்து வருகின்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை ஆதரிக்கும் முகமாக இந்த விழிப்புணர்வுக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இலங்கை நாட்டில் வாழும் ஒட்டு மொத்த தமிழ் மக்களினது குரலாக கடந்த காலங்களில் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் அங்கம் வகித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினது தலமைத்துவங்களில் ஏற்பாட்டுள்ள கொள்கை மாற்றம், மற்றும் தமிழ் தேசியம் என்பது ஒரு வெற்றுக்கோசம் என்கின்ற விடயப்பரப்பு போன்ற விடயங்களில் அதிப்தியடைந்த தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளினது கடந்த கால உன்னிப்பான நோக்குதலினடியாக ஒரு புதிய புத்தாக்கமுள்ள இளம் தலைமுறையினரை எதிர்வரும் காலங்களில் ஜனநாயக நீரோட்ட அரசியலில் பிரயோகிப்பதனுாடாக நாட்டினது முகிர்ப்புக்கொள்கைகளுக்கோ அன்றி ஒருமைவாத கருத்திற்கு நெகிழ்ச்சியடையாது தமிழ் தேசியத்தினது கொள்கைகளுடன் மக்களிற்கான வாழ்வியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான காலகட்டமாக இது அமைந்துள்ளது.
அந்தவகையில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் இடம் பெறவுள்ள விழிப்புணர்வு கருத்தரங்குகள் மூலம் எமது பிரதேச மக்களினது அபிலாசைகளினை வென்றெடுக்கக்கூடிய புதிய தழிழ் தலைமைகளினை உருவாக்குவது காலத்தின் கட்டாயமும், தேவையாகவும் உணரப்படுகின்றது. எனவே காலத்தின் தேவை கருதி தாயக பிரதேசத்திலுள்ள மக்களிற்கு இந்த விடயங்களினை தெளிவாக்குவதன் மூலம் எமது கட்சியினது வெற்றியினை அல்லது ஆகக்குறைந்தது 02 நபர்களினையாவது பாராளுமன்ற செல்ல வைக்க வேண்டும் எனவும் அவர் தனது Skype மூலமாக விழிப்புணர்வின் மூலம் தெளிவாகின்றது.
மேலும் கனடிய வாழ் புலம்பெயர் உறவுகள் உங்களது தாயக உறவுகளிற்கு இதனை தெளிவவாக்குவதன் மூலம் நாம் ஒரளவிற்கு இந்த விடயத்தினை வெளிப்படுத்தக்கூடியதாகவுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டிருந்தார். அதனது ஒலிவடிவம் இணைக்கப்பட்டுள்ளது.