தேர்தலில் போட்டியிடவில்லை ஆனால் கட்சிக்குள் போராட்டம் தொடரும் – அனந்தி
அனந்தி சசிதரன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக தனித்து தேர்தலில் ஒரு அணியை இறக்க போவதில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் விரும்பியிருந்த போதும் தமிழரசு கட்சியினர் தான் ஆசன ஒதுக்கீட்டை மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான மக்கள் ஒத்துழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் தனித்து போட்டியிடும் முடிவை தான் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக தமிழரசு கட்சி மக்களது ஆணையையும் மக்களது கருத்துகளையும் உறுப்பினர்களது எண்ணங்களையும் மதிக்காமல் புரிந்து கொள்ளாமல் தமிரசு கட்சி தலைமை எதேச்சதிகாரமாக செயற்படுவதை எதிர்த்து கட்சிக்குள் தொடர்ந்து போராட போவதாகவும் அனந்தி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்.
சரணடைந்த எழிலன் உள்ள காணொளி இராணுவத்தால் காட்டப்பட்டது-அனந்தி