சரணடைந்த எழிலன் உள்ள காணொளி இராணுவத்தால் காட்டப்பட்டது-அனந்தி
அண்மைய தேர்தல் கள நிலையில் தமிழரசு கட்சியில்
அனந்திக்கான ஆசனம் மறுக்கப்பட்ட செய்தியை அண்மையில் அனந்தி வெளியிட்டிருந்தார் இந்த நிலையில் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.
அந்த நேர்காணலிலேயே அனந்தி இறுதிப்போரில் சரணடைந்த தனது கணவரான எழிலன் இராணுவ பிடியில் கதிரையில் அமரவைத்து விசாரணை செய்யும் காணொளியை இராணுவத்தினர் காண்பித்ததாக தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் தனது நண்பி ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த ஆதாரமும் ஐ.நா விடம் கையளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.(இறுதி காணொளியில் இதனை தெரிவிக்கின்றார்)